திண்டுக்கல், தேனியில் 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

80 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல், தேனியில் 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
Published on

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பணியிட மாறுதல் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த நிலையில், திண்டுக்கல் மற்றும் தேனியில் 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 80 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com