அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின


அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. நெல் மணிகள் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி

இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான பரப்பளவை விடகூடுதலாக 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த ெதாடர் மழையால் திருவிழந்தூர், மாப்படுகை, சோழம்பேட்டை, கோழிகுத்தி, பாண்டூர், தாழஞ்சேரி, ஆனந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தண்ணீர் மூழ்கிய நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

காப்பீட்டு திட்டம்

மாப்படுகை கிராமத்தில் 100 ஏக்கருக்குமேல் நெற்பயிர்கள் மூழ்கி முளைக்க தொடங்கி விட்டன. இதனை மயிலாடுதுறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் அறுவடைஎந்திரங்கள் வயல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சீர்காழி

உடனடியாக பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அனைத்து பகுதிகளிலும் திறந்து ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில்மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது.

விவசாயிகள் கவலை

அகனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.இதனால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அகனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.இதனால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story