இன்று 89-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்று 89-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை
Published on

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 89-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தெடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com