கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

அன்னவாசல் அருகே கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ஏதினிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல் போர் அருகே மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த வழியாக சென்ற பெயிண்டர் மருதப்பன் என்பவர் சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சிப்காட் தீயணைப்பு வீரர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த மலைப்பாம்பு நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com