6 அடி நீள பாம்பு பிடிபட்டது


6 அடி நீள பாம்பு பிடிபட்டது
x

வந்தவாசியில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் சேத்துப்பட்டு ரோட்டில் வசித்து வருபவர் ஞானசேகர்.

இவரது வீட்டில் திடீரென ஒரு பாம்பு புகுந்தது. இதனை கண்ட ஞானசேகர் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வீட்டில் புகுந்திருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை பொன்னூர் காப்புக்காட்டில் விட்டனர்.


Next Story