ஆடு மேய்த்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
ஆடு மேய்த்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி நல்லப்பொண்ணு(வயது 55). இவர் வயலில் தனது ஆடுகளை மேய்த்து விட்டு மீண்டும் வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அயன்பேரையூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென நல்லபொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து நல்லபொண்ணு வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story