டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Published on

தென்காசி,

தென்காசி மங்கம்மாள் சாலையில் வசித்து வரும் காளிமுத்து மகன் முத்துப்பாண்டி. 16 வயது சிறுவனான முத்துப்பாண்டி வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் பறந்த ஈசல்களை பிடித்து கொண்டிருந்தான்.

அப்போது டிரான்ஸ்பார்மரில் உரசியபடி இருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்ததை அறியாத சிறுவன், அக்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு தென்காசி தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com