செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடந்தது.

செங்கல்பட்டு

இதற்கு மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். முடநீக்கு வல்லுநர் பிரித்தா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் கண்பார்வையற்றோருக்கான பிரைலி கைக்கெடிகாரங்கள் வழங்கினார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட டிலைட் மசாலா தொழில் குழுவினர் விற்பனை செய்ய ஏதுவாக சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் மின்சாரத்தில் இயங்கும் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 500 மதிப்பிலான மின்சாரத்தில் இயங்கும் நடமாடும் உணவக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் போக்குவரத்து நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story