குழியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


குழியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

குழியில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் பசுமை நகரில் வசிக்கும் கண்ணன்-ரேவதி ஆகியோரின் பசு மாடு அருகில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட தண்ணீர் உள்ள குழியில் தவறி விழுந்தது. உடனடியாக இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, குழியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் மாடுகளை வயல்வெளியில் மேய்க்காமலும், வீட்டில் கட்டி வைத்து தீனி வைக்காமலும், மாடுகளை சாலை பகுதியில் சில உரிமையாளர்கள் விட்டுவிடுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மாடுகள் குழிகள், சாக்கடைகளில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதும், அவற்றை தீயணைப்பு துறையினர் மீட்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே உரிமையாளர்களை நேரில் அழைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவர்களுக்கு மாடுகளை பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story