சதுரகிரிக்கு வந்த பக்தர் திடீர் சாவு

சதுரகிரிக்கு வந்த பக்தர் திடீரென இறந்தார்.
சதுரகிரிக்கு வந்த பக்தர் திடீர் சாவு
Published on

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் நேற்று தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மாவட்டம் கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த சிவக்குமார் (வயது48) என்பவர், சாமி தரிசனம் செய்வதற்காக தனது நண்பர்களுடன் வந்திருந்தார். மலைப்பாதை வழியாக கோவிலுக்கு நடந்து சென்றார். வன துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை டோலி கட்டி தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com