தீயணைப்பு மீட்பு வாகனம் சாலையில் கவிழ்ந்தது


தீயணைப்பு மீட்பு வாகனம் சாலையில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 13 July 2023 12:38 AM IST (Updated: 13 July 2023 6:01 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு மீட்பு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு நுழைந்தது. இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே 4 தீயணைப்பு வீரர்கள் சிறிய ரக தீயணைப்பு மீட்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விட சென்றனர். அப்போது எடமலைப்பட்டிபுதூர் சோதனைச்சாவடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தீயணைப்பு மீட்பு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story