விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை
விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ெபாம்மை கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகுற்றுகிறது. கயல் வடிவில் அமைந்த கண்களும், அவற்றின் புருவங்களும் கீரல் வடிவில் வரையப்பட்டுள்ளது. வாய், மூக்கு, காதுகள், தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 2,452 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்விற்கு இணையாக பொருட்கள் கிடைத்து வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story