விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

ஆலங்குளத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
Published on

ஆலங்குளம், 

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ், மூத்த ஆசிரியர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 182 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் (பொறுப்பு) பரமசிவன், ஆசிரியர்கள், ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜாராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com