முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2023 5:54 AM GMT (Updated: 20 April 2023 7:50 AM GMT)

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சமூகநீதிக் காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர். மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது அவமானம். அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் சுயமரியாதை என்று சொன்னவர் வி.பி.சிங்" என்று கூறினார்.

மேலும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story