மதகில், மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி


மதகில், மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

கீழையூர் அருகே மதகில், மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலியானாள். இந்த விபத்தில் சிறுமியின் தாய்-தந்தை ஆகியோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே மதகில், மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலியானாள். இந்த விபத்தில் சிறுமியின் தாய்-தந்தை ஆகியோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதகில், மோட்டார் சைக்கிள் மோதியது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள். விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரபா. இவர்களுக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் இருந்தாள்..

நேற்று மாலை அருள் தனது மனைவி பிரபா, மகள் வர்ஷா ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காமேஸ்வரத்தில் இருந்து திருப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார். காமேஸ்வரத்தில் தென்னம்பிள்ளை சாலையோரத்தில் உள்ள மதகில், எதிர்பாராதவிதமாக அருள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

சிறுமி பலி; தாய்-தந்தை படுகாயம்

இந்த விபத்தில் அருள், பிரபா, வர்ஷா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமி வர்ஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story