பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி

திருவெறும்பூர்,ஜூலை.19-

திருவெறும்பூரை அடுத்த நடராஜபுரம் ஊராட்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 39). இவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வேலை முடிந்து கணவருடன் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை அரசாயி கோவில் இந்திராநகர் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயஸ்ரீ அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story