நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 11 July 2023 1:30 AM IST (Updated: 11 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி வந்த அரசு பஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றது.

திண்டுக்கல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாலை 3 மணி அளவில் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பகுதிக்கு அந்த பஸ் வந்தது. அப்போது திடீரென பழுதாகி நடுரோட்டில் பஸ் நின்றது.

இதனையடுத்து டிரைவர் பழுதை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அவரால் முடியவில்லை. இதனால் பஸ்சை விட்டு பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். பஸ்சில் பயணித்த குழந்தைகள், முதியவர்கள் பரிதவித்தனர். சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக கொளுத்தும் வெயிலில் தங்களது உடைமைகளுடன் பயணிகள் காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் ஏற்றி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பழனி-காரைக்குடி இடையே 150 கிலோமீட்டர் தொலைவு ஆகும். இதுபோன்ற தொலைதூரத்துக்கு ஓட்டை உடைசல் இல்லாத நல்ல பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story