திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலியானார்.
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர்- வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கிடையே நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த நபர் சிமெண்டு நிறத்தில் அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





