கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு அட்டகாசம்


கள்ளிப்பட்டி அருகே  வாழை தோட்டத்தில் புகுந்து  மர்ம விலங்கு அட்டகாசம்
x

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கள்ளிப்பட்டி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டது.

விவசாயி

டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி பழையூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. விவசாயி.

இவர் அங்கு உள்ள வாய்க்கால் ரோடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 3 ஏக்கர் தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருடைய வாழை தோட்டத்தில் மர்ம விலங்கு புகுந்து 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசப்படுத்தியது.

மர்ம விலங்கு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு மீண்டும் பூபதியின் வாழை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது.

பின்னர் 30-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசப்படுத்தியது. நேற்று காலை விவசாய தோட்டத்துக்கு வந்த பூபதி வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வாழை தோட்டத்தில் மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி இருந்தது. இது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை பீதி அடைய செய்தது.

நடவடிக்கை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, 'நாங்கள் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் மர்ம விலங்குகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை நாசம் செய்து விடுகின்றன. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். அறுவடைக்கு தயாராக இருக்கும் வாழைகளை மர்ம விலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மீண்டும் மர்ம விலங்கு தோட்டத்தில் புகுந்து வாழைகள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.


Next Story