ஏமூர்புதூரில், புதிய ரேஷன் கடை


ஏமூர்புதூரில், புதிய ரேஷன் கடை
x

ஏமூர்புதூரில், புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.36 லட்சமும், பாகநத்தம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சமும், ஏமூர்புதூர் ரேஷன் கடைக்கு ரூ.16 லட்சமும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதையடுத்து புதிய கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் அபிராமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தாந்தோணி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story