மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி

மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி
x

மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி மீனுக்கு இகாரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சேலம்,

மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி மீனுக்கு இகாரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் புதிய வகை கெளுத்தி மீனை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தினர் கண்டறிந்தனர். பங்காசியஸ் இனத்தைச் சேர்ந்த இந்த புதிய கெளுத்தி மீனின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டன.

இவை பங்காசியஸ் இனத்தின் பிற வகைகளில் இருந்து வேறுபட்டவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, தங்கள் தாய் அமைப்பின் பெயரான ஐசிஏஆர் பெயரை இந்த புதிய மீன் இனத்துக்கு வைத்து இகாரியா என பெயரிட்டுள்ளதாக தேசிய மீன் மரபியல் வளங்களின் செயலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்கள் இந்த மீனை 'ஐக்கெளுத்தி' என்று அழைக்கின்றனர்.

Next Story