தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கன்னியாகுமரி
புதுக்கடை:
புதுக்கடை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து இனயம் அருகே உள்ள சின்னத்துறை பகுதியில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வால்டர் (வயது 52) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.640 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story