டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றவர் திடீர் சாவு

சாத்தான்குளம் அருகே டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றவர் திடீரென இறந்தார்.
டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றவர் திடீர் சாவு
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாகுடி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அங்கு நெடுங்குளத்தைச் சேர்ந்த காந்தி (வயது 45) என்பவர் மது குடிப்பதற்காக அடிக்கடி செல்வது வழக்கம். நேற்று அவர் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் டாஸ்மாக் பார் வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவருடைய உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் மது போதையில் இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com