மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலி


மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலி
x

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே கர்ப்பிணி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (22). இவர் கர்ப்பமாக உள்ளார். நேற்று மதியம் அஜித் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரை நோக்கி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புங்கம்பேடு கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது இவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அஜித் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அவருக்கு கால் முறிந்தது. அவரது மனைவி ஐஸ்வர்யா லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண் முன்னே துடிதுடித்து இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் படுகாயமடைந்த அஜித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்தின் உறவினரான ராஜாபாபு செங்குன்றம் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story