முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி
சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரட்சண்யபுரம் சேகர சபை குருவானவர் ஜான்செல்வம் ஆராதனை செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வில்சன் அனைவரையும் வரவேற்று பேசினார். தாளாளர் ஜேசு ஜெகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் விஜய் ஸ்டான்லி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஜெயந்தா ஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அப்துல் கலாம் மற்றும் புகழ்பெற்ற வரலாற்று வல்லுனர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டாக கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். முடிவில் கணினிவியல் துறை தலைவர் எவனேசர் பொன் செல்வி நன்றி கூறினார்.
சபை ஊழியர் சுரேஷ் சாலமோன் நிறைவு ஜெபம் செய்து முடித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.