வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 8 July 2023 1:00 AM IST (Updated: 8 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவா (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகானந்தம் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்புரம் என்னுமிடத்தில் சிவா மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆட்டோவில் வந்த முருகானந்தம், மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் கீழே விழுந்த சிவாவுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சிவா வீட்டுக்கு சென்றார்.

அதன்பின்பு சிவாவின் வீட்டுக்கு முருகானந்தம், அவரது தம்பி கனிகுமார் (22), உறவினர் பாலபிரவீன் (19) ஆகிய 3 பேரும் வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சிவாவை அவர்கள் அரிவாளால் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க சென்ற அவருடைய மனைவி சந்தியாவையும் தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பியோடிவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த சிவாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கூம்பூர் போலீசில் சந்தியா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்.


Related Tags :
Next Story