வேகத்தடை அமைக்க வேண்டும்
வெலிங்டன் கன்டோன்மெண்ட் மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குன்னூர்
குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் கன்டோன்மெண்ட் பொது மருத்துவமனை உள்ளது. இங்கு நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நுழைவுவாயில் முன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வளைவு உள்ளது. அப்பகுதியில் ஒருபுறத்தில் இருந்து வாகனங்கள் வருவது தெரியாத அளவுக்கு மறைமுகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் நோயாளிகள் பஸ்சில் மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த சமயத்தில் சாலையில் உள்ள வளைவில் வாகனங்கள் வேகமாக வரும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் சாலையில் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இருபுறமும் வாகனங்கள் வந்து செல்வதால், நோயாளிகள் சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கன்டோன்மெண்ட் பொது மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் வேகக்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.