சாலையில் திடீா் பள்ளம்; போக்குவரத்து பாதிப்பு


சாலையில் திடீா் பள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
x

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

மார்த்தாண்டம், குழித்துறை சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையில் நெய்யாறு இடதுகரை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த கால்வாயின் அருகே செல்லும் குழித்துறை-உண்டானகுழி சாலையில் அரிப்பு ஏற்பட்டு 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் சென்ற விபத்தில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சாலையின் குறுக்கே மரத்தடியை போட்டு வைத்துள்ளனர். திருத்துவபுரத்திற்கும் குழித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்போது, வாகனங்கள் இந்த சாலை வழியாக இயக்கப்படும். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story