ஒவ்வொரு கிராமத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்


ஒவ்வொரு கிராமத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

விழுப்புரம்

விழுப்புரம்

வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள் ஆகியோர்களுக்கான சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வளவனூரில் நடைபெற்றது. இதற்கு வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், சட்டம்- ஒழுங்கு சம்பந்தமாகவும், சட்டவிரோத செயல்களான கஞ்சா, புகையிலை பொருட்கள், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழித்து உரிய நடவடிக்கை எடுத்து கிராமங்களில் போதை சம்பந்தமான எவ்வித செயல்களும் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்க ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


Next Story