பெரியார் பஸ் நிலையம் பகுதியில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர் கைது


பெரியார் பஸ் நிலையம் பகுதியில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர் கைது
x

பெரியார் பஸ் நிலையம் பகுதியில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை திடீர்நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பாலம் அருகே வாலிபர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது வாலிபர் ஒருவர், பிறந்த நாள் கேக்கை கத்தியால் வெட்டி, அதனை செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதியில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டியவரை பிடித்து விசாரித்தனர். அதில் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்ராபாளையத்தை சேர்ந்த குருதர்ஷன் (வயது 19) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story