தாளவாடியில் சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது


தாளவாடியில் சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது
x

தாளவாடியில் சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றில் தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலை நேதாஜி சர்க்கிள் அருகே சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் ஒன்று ரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். 30 நிமிடத்துக்கு பின்னர் அந்த ரோட்டில் போக்குவரத்து சீரானது.


Next Story