இல்லத்தரசிகளை மகிழ்வித்த மகளிர் உரிமைத்தொகை


இல்லத்தரசிகளை மகிழ்வித்த மகளிர் உரிமைத்தொகை
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

இல்லதரசிகளை மகிழ்வித்த மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

விழுப்புரம்

பெண்கள் கருத்து

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி, அதை அங்கீகரிக்கும் வகையில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்த்த இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண்கள் விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

அதன்படி இந்த திட்டத்தில் சேர தமிழகம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6½ லட்சம் பேருக்கும் ஒரே நேரத்தில் வங்கிகள் மூலமாக ரூ.1000 அனுப்பும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு நேற்று முன்தினமே அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வந்தது. இதை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு வங்கி மூலம் ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த பணத்தை பெற்ற இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயன் அடைந்தனர். இதில் பயன் பெற்ற பெண்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-


Next Story