7 ஆண்டுகளாக அவிநாசி முதல் ஊட்டி வரை நடக்கும் அதிசய மனிதர்....!
அவிநாசி முதல் ஊட்டி வரை 7 ஆண்டுகளாக ஒரு அதிசய மனிதர் தொடர்ந்து நடந்து வருகின்றார்.
குன்னூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள வலையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 40). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவிநாசி பகுதியில் இருந்து உதகைக்கு நடந்தே வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துகொண்டார்.
கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ள மூர்த்தி தனது இளம் வயதில் பெற்றோரை இழந்த பிறகு நடப்பதை முழுநேர வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தீவிர சிவ பக்தரான இவர் அசாதாரணமாக அவிநாசியிலிருந்து ஊட்டிக்கும் ஊட்டியிலிருந்து அவிநாசிக்கும் 220 கி.மீ., தூரம் நடந்து சென்று வருகின்றார்.
நீலகிரி மக்கள் இவரை சாதுவாக கருதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர். தங்களிடம் இருக்கும் உணவு மற்றும் சிறு தொகையை வழங்கி செல்கின்றனர்.
இது குறித்து மூர்த்தி கூறுகையில்,
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறேன். தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து சென்றேன். தற்போது அவிநாசி முதல் ஊட்ட வரை கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.