காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. சென்னையில் பரபரப்பு..!
படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள்மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, தன்னை காதலிக்கவேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் வற்புறுத்தி வந்துள்ளார்.
மாணவி, அதனை ஏற்க மறுத்த நிலையில், திடீரென நவீன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள்மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Related Tags :
Next Story