திருடன் என தெரியாமல் பைக்கில் லிப்ட் கொடுத்த இளைஞர்... ரூ.10 ஆயிரம் அபேஸ் - தப்பி ஓடிய திருடன்


திருடன் என தெரியாமல் பைக்கில் லிப்ட் கொடுத்த இளைஞர்... ரூ.10 ஆயிரம் அபேஸ் - தப்பி ஓடிய திருடன்
x
தினத்தந்தி 21 Jan 2024 4:43 PM GMT (Updated: 21 Jan 2024 5:08 PM GMT)

திருத்தணியில் பைக்கில் லிப்ட் கொடுத்தவரிடமிருந்து ஒருவர் 10 ஆயிரம் ரூபாயை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி,

தாம்பரத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் தேர்வுக்கட்டணம் செலுத்த திருப்பதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அருகே சென்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் இடைநிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார்.

இளைஞர் சொன்ன இடத்தில் மதியழகன் அவரை இறக்கி விட்டுள்ளார். அதன்பிறகுதான் தான் முதுகில் மாட்டி இருந்த பை திறந்திருப்பதை மதியழகன் கண்டு பிடித்தார். லிப்ட் கேட்ட ஆசாமி தன் பையில் இருந்த பர்சில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்ததைக் கண்டு அதிர்ச்ந்த மதியழகன், நடந்து சென்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு தன் பைக்கிலேயே அழைத்துச் செல்ல முற்பட்டார்.

ஆனால் அந்த இளைஞர் பைக்கில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.


Next Story