கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை மதுரவாயல், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜு (வயது 33). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் தரணீஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜு, வீட்டில் இருந்த குப்பையை வெளியே கொட்டி விட்டு வருவதற்காக சென்றார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி கலைச்செல்வி, சமையல் அறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய கலைசெல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவர் ராஜு மீது கலைச்செல்வி சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் விரக்தி அடைந்த கலைசெல்வி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கலைச்செல்விக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


Next Story