தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்


தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்
x

தபால் நிலையங்களில் ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது.

திருநெல்வேலி

மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை பெறும் வகையில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் நெல்லை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை ஆகிய தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் துணை தபால் அலுவலகங்களில் கடந்த 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story