வயலில் சரக்கு வேன் கவிழ்ந்தது


வயலில் சரக்கு வேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 22 Dec 2022 7:15 PM GMT (Updated: 22 Dec 2022 7:15 PM GMT)

வயலில் சரக்கு வேன் கவிழ்ந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே நாகக்குடையான் பொன்னாங்கன்னி ஈரவாய்க்கால் சாலையில் நேற்று பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் சாலை ஓரத்தில் நெல்சாகுபடி செய்துள்ள வயலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்களுக்கு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story