நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாண்டுசேலம் ரெயில்வே கோட்டம் ரூ.80½ கோடி வருவாய் ஈட்டி சாதனைகடந்த ஆண்டை விட அதிகம்


நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாண்டுசேலம் ரெயில்வே கோட்டம் ரூ.80½ கோடி வருவாய் ஈட்டி சாதனைகடந்த ஆண்டை விட அதிகம்
x
சேலம்

சூரமங்கலம்

நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாண்டு சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.80½ கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

வருவாய் ஈட்டி சாதனை

சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ெரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சரக்கு போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்து மூலமாக அதன் வருவாயும் அதிகரித்து வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 307 டன் சரக்குகளை கையாண்டு ரூ.80 கோடியே 45 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வருவாயுடன் ஒப்பிடும்போது இது 11.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

பல்வேறு ஊர்களுக்கு...

இதில் அதிகபட்சமாக 4.86 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்கள், 1.35 லட்சம் டன் சிமெண்டு மூட்டைகள், 26 ஆயிரம் டன் ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. இதேபோல் பார்சல் பிரிவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதத்தில் 94 ஆயிரத்து 862 பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரூ.4 கோடியே 61 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளன. இதில் கோவையில் இருந்து காய்கறிகள், பழங்கள், திருப்பூரில் இருந்து துணி வகைகள், ஈரோட்டில் இருந்து முட்டை உள்ளிட்டவை இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story