நாடு முழுவதும், ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப்படம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
அடிக்கடி இதுபோன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






