பதிவு செய்யாத சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை


பதிவு செய்யாத சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

பதிவு செய்யாத சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்து உள்ளார்.

மதுரை

மதுரை,

பதிவு செய்யாத சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்து உள்ளார்.

சுற்றுலா நிறுவனங்கள்

மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் தொடங்கவுள்ள சுற்றுலா தொடர்புடைய நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்கள் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இது தொடர்பான விவரங்களை மேலவெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அந்த அலுவலகத்தை தொலைபேசி எண் 0452 2334757, இ-மெயில் முகவரி touristofficemadurai@gmail.com ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story