நடிகர் சேரன் சாமி தரிசனம்


நடிகர் சேரன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 July 2023 1:00 AM IST (Updated: 8 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நடிகர் சேரன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வருகை தருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான சேரன் தனது குடும்பத்துடன் நேற்று பழனிக்கு வந்தார். அப்போது அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ரோப்கார் மூலம் கீழே இறங்கினார். இதற்கிடையே கோவிலுக்கு வந்த சேரனுடன் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் என பலரும் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தனர். பின்னர் பழனியில் இருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

1 More update

Related Tags :
Next Story