நடிகர் சரத்குமார் பிறந்தநாள்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து...!

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சரத்குமார் பிறந்தநாளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் பிறந்தநாள்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து...!
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறந்த நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு சரத்குமார் அவர்களுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அண்ணன் திரு சரத்குமார் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன், தமது கலைப்பணி மற்றும் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com