மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

கோபி, பவானியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் பங்கேற்றார்கள்.

ஈரோடு

கோபி, பவானியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் பங்கேற்றார்கள்.

கோபி

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, 'அ.தி.மு.க.வை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. பிடிக்கும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு மின் கட்டண உயர்வு மற்றும் வரி உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்' என்றார்.

பவானி

இதேபோல் பவானி அந்தியூர் பிரிவில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, 'அ.தி.மு.க. ஆட்சியின் மகத்தான திட்டங்களை தி.மு.க. அரசு தவிர்த்து வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.

தி.மு.க.வை ஆதரித்த அரசு ஊழியர்கள் இப்போது கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க. அமல்படுத்துமா? தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படை தேவை மின்சாரம். இந்தநிலையில் மின்சாரத்தின் கட்டண உயர்வு காரணமாக தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் முடங்கும் சூழ்நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என்றார். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்துக்கு முன்னிலை வகித்த பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.


Related Tags :
Next Story