அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் செந்தில்பாலாஜி மீது உள்ள வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டதை அடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. ஆனால் அவர் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் இருந்த இலாகா மற்றவர்களுக்கு மாற்றப்பட்டு அவர் இலாகா இல்லா அமைச்சராக இருந்து வருகிறார். அவர் மீது உள்ள வழக்குகளை விரைவு படுத்தி அதற்குரிய தக்க தண்டனை வழங்கிடவும், அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் ராமஜெயலிங்கம், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தங்க பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story