அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
சிவகங்கை
திருப்பத்தூர்
சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்ட நிலையை சேர்ந்தவர் ஜெகன்(வயது 40). இவர் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலை திருப்பத்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இவரது வீட்டில் பணம் கட்டாதால் பீஸ் கேரிகளை மின் ஊழியர்கள் பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஜெகன் தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் மருத்துவமனையில் இருந்ததாகவும், அதனால் பணம் கட்ட முடியவில்லை என்றும் அபராதத்துடன் பணம் கட்ட தானே போகிறேன். அதற்குள் ஏன் பீஸ் கேரியலை பிடுங்குகிறீர்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகராறில் ஜெகன், மின் துறை உதவியாளரான முகமது சுல்தான் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story