ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:45 PM GMT)

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை

திருப்புவனம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப (டிப்ளமோ) சாலை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் திருப்புவனத்தில் உள்ள பயணியர் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட, மாநில குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் டிப்ளமோ கல்வி தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு, உதவி வரைவாளர் என்ற பணி உயர்வு உடனடியாக வழங்க கோரி தமிழக அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் ரமேஷ்வரன் நன்றி கூறினார்.


Next Story