வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி


வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
x

தாண்டிக்குடி காபி தோட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

திண்டுக்கல்

தேனி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ், கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் காபி, மிளகு, அவகோடா பயிர்கள் சாகுபடி நடைமுறைகள் குறித்து பயிற்சி பெற்றனர். அப்போது காபி, மிளகு, அவகோடா உள்ளிட்ட பயிர்களை எவ்வாறு சாகுபடி செய்வது, அவற்றை பராமரிப்பு செய்வது, மருந்து தெளித்தல், அறுவடை செய்வது உள்ளிட்ட முறைகள் குறித்து மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றனர். இதில், கோகுல பிரியா, ஹேமலதா, ஜூமான பர்வீன், ஸ்ரீவர்ஷனி, கலைவாணி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story