வேளாண் பொருட்கள் ரூ.38½ லட்சத்துக்கு ஏலம்

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.38½ லட்சத்துக்கு ஏலம் போனது.
வேளாண் பொருட்கள் ரூ.38½ லட்சத்துக்கு ஏலம்
Published on

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தேங்காய், தேங்காய் பருப்பு

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 31.84 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 753 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.35-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், சராசரி விலையாக ரூ.25.25-க்கும் என்று மொத்தம் ரூ.73 ஆயிரத்து 858-க்கு விற்பனையானது.

அதேபோல் 166.23 குவிண்டால் எடை கொண்ட 349 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.83.80-க்கும், சராசரி விலையாக ரூ.84.59-க்கும் 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.69-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் என்று மொத்தம் ரூ.13 லட்சத்து 47 ஆயிரத்து 741-க்கு விற்பனையானது.

எள்

229.28 குவிண்டால் எடை கொண்ட 307 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.116.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.101.89-க்கும், சராசரி விலையாக ரூ.108.89-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.113.14-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.94.42-க்கும், சராசரி விலையாக ரூ.110.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.113.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.113.59-க்கும், சராசரி விலையாக ரூ.113.89-க்கும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 236-க்கு விற்பனையானது.

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.38 லட்சத்து 63 ஆயிரத்து 835-க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com