வேளாண் பொருட்கள் ரூ.29¾ லட்சத்துக்கு விற்பனை

சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.29¾ லட்சத்துக்கு விற்பனையானது.
வேளாண் பொருட்கள் ரூ.29¾ லட்சத்துக்கு விற்பனை
Published on

நொய்யல் அருகே சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 67.47 குவிண்டால் எடை கொண்ட 18 ஆயிரத்து 310 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 636-க்கு விற்பனையானது.

அதேபோல் 201.68 குவிண்டால் எடை கொண்ட 443 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.09-க்கும், சராசரி விலையாக ரூ.85.09-க்கும், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.15-க்கும் என்று மொத்தம் ரூ.16 லட்சத்து 41 ஆயிரத்து 952-க்கு விற்பனையானது.

110.49 குவிண்டால் எடை கொண்ட 148 மூட்டை சிவப்பு எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.114.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.96.69-க்கும், சராசரி விலையாக ரூ.111.11-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 504-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 78 ஆயிரத்து 92-க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com